சிம்பாவேயில் அரச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை, அந் நாட்டு இராணுவத்தினர் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, குற்றவாளிகளை இலக்கு வைத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இராணுவத்தினர் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. அரசாங்கத்தை இராணுவத்தினர் கைப்பற்றவில்லை எனவும், ஜனாதிபதி ரொபட் முகாபே பாதுகாப்பாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், விரைவில் தமது இலக்கை நிறைவேற்றுவதோடு, நிலைமையை வழமைக்குக் கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாகவும், இராணுவத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read More

உலகிலேயே முதன் முறையாக மின்சாரத்தின் உதவியால் கப்பலை இயக்கி சீனா சாதனை படைத்துள்ளது. கார் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே மின்சாரம் மூலம் இயக்கப்பட்டு வந்த நிலையில், சீனா சரக்கு கப்பலை மின்சாரம் மூலம் இயக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த கப்பல் 70.5 மீட்டர் நீளமும், 600 டன் எடையும் உடையது. அதில் 2 ஆயிரம் டன் சரக்கு ஏற்றப்பட்டு மின்சாரம் மூலம் இயக்கப்பட்டுள்ளது. கப்பலில் பொருத்தப்பட்ட 26 டன் லித்தியம் பேட்டரிகளில் 2 மணி நேரம் மின்சாரம் […]

Read More

தென்கொரியாவின் தென்கிழக்கு பகுதியில் இன்று(15) காலை 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தென்கொரியா செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கம் தென்கிழக்கு கரையோரம் இருக்கும் போஹாங் நகரின் வடக்கில் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிலநடக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகின்ற இடத்திலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தென்கொரியாவின் தலைநகர் சியோலிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ரஷ்யாவின் கிழக்கு மாகாண பகுதியில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள காபரோவ்ஸ்க் மாகாணத்தில் இருந்து 1000 கி.மீ தொலைவில் உள்ள நெல்கன் என்ற கிராமத்தில் இந்த விபத்து  இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. காபரோவ்ஸ்க் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 19 பேர் செல்லக்கூடிய சிறிய ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே கட்டுப்பாட்டு அறையின் […]

Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நாளை(16) ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர். குறித்த சந்திப்பில் 8 மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் லீதாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார்.

Read More

நிர்வாக முறைக்கேடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நுகேகொடை – அனுலா வித்தியாலயத்தின் அதிபர் இடமாற்றப்பட்டுள்ளார். அதன்படி, நுகேகொடை அனுலா வித்தியாலயத்தின் அதிபர், கல்வி அமைச்சுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Read More

முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்கவை வெலிசெர கடற்படை வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு கொழும்பு – கோட்டை நீதவான் இன்று(15) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read More

பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்வதற்காக, நிறுவப்படவிருக்கின்ற விசேட மேல் நீதிமன்றத்துக்கான சட்டமூலத்தை, எதிர்வரும் ஜனவரி மாதத்தில், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக, அரச தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More

இலங்கையின் எந்தப் பாகங்களிலும் இயற்கை அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை என காலநிலை அவதான நிலையம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் எந்தப் பகுதியிலும் இயற்கை அனர்த்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என குறித்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, மக்கள் தேவையற்ற பீதிகளை அடுத்து அச்சமடையத் தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Read More

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச பணியாளர்களின் சம்பளம் 15% ஆல் அதிகரிக்கப்படும் என உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தன நாடாளுமன்றில் வைத்து நேற்று(14) தெரிவித்துள்ளார். அலுவலக உதவியாளரில் இருந்து சட்டமா அதிபர் வரையில் அனைத்து அரச பணியாளர்களுக்கும் குறித்த இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது. அதன்படி, அலுவலக உதவியாளரின் அடிப்படை சம்பளம் 14,000 ரூபாயில் இருந்து 23,000 ரூபா, சட்டமா அதிபரது சம்பளம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபா மற்றும்  விசேட மருத்துவர்களின் அடிப்படை […]

Read More
Facebook
Twitter
YouTube
Google+
http://serendibfm.lk/date/2017/11
Pinterest
INSTAGRAM