அங்கவீனமுற்ற இராணுவத்தினர் சம்பந்தமாக அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லையானால் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிப்பதாக இராணுவத்தினரின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் யூ.டீ.வசந்த கூறியுள்ளார். நேற்றைய தினம் கொழும்பு கோட்டை பகுதியில் அங்கவீனமுற்ற இராணுவத்தினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். தற்போதும் அங்கவீனமுற்ற இராணுவத்தினர்கள் சில கொழும்பு கோட்டையில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவிகள்  முகத்தை மூடும் விதமாக ஆடையணிந்து பரீட்சைக்கு தோற்ற முடியாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சில பரீட்சாத்திகள் குறித்த முகமூடிகளை அணிந்து அதனுள் மைக்ரோ தொலைபேசிகள் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பக் கருவிகளை மறைத்து வைத்திருப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இராஜாங்க கல்வியமைச்சர் ராதா கிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், முகமூடிய நிலையில் பரீட்சை எழுதும் பரீட்சாத்திகளது உண்மை நிலையை கண்டறிவதில் ஏற்படுகின்ற சிக்கல்களை கருத்திற் கொண்டே […]

Read More

இனங்களின் தனித்துவத்தை பாதுகாத்துக் கொண்டு இலங்கையர்கள் என்று ஒன்றுபட்டு வாழ வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற முன்னாள் சபாநாயகர் அல்ஹாச் பாக்கீர் மாக்காரின் 20ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்ட போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையர் அனைவரும் ஓரின மக்கள் என்றே தேசிய கீதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் தத்தமது இன அடையாளங்களுடன் ஒன்றுமையாக வாழ வேண்டும். இலங்கையை சிங்கள நாடென்றோ, வடக்கு […]

Read More

சீனாவின் மேற்குப் பகுதியில் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் 100 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கலாம் என்றும் சீன அரசாங்க செய்திகள் தெரிவித்துள்ளன. இதுவரை 8 பேருடைய சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 88 பேர் காயமடைந்துள்ளதாகவும், இவர்களில் 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் சிச்சுவான் மாகாண உத்தியோகபுர்வ செய்திச் சேவை அறிவித்துள்ளது. உயிரிழந்த 8 பேரில் ஐவர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எனவும் அச்செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. சுமார் 6.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ள […]

Read More

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை இம்மாற்றம் நடைமுறையில் இருக்கும் எனவும் தற்பொழுது சேவையிலுள்ள ரயில்களை விட மேலதிக ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை விடுமுறையை முன்னிட்டு இன்று (09) முதல் ரயில் சேவையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. இன்று இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்தக் கோரிக்கையை விடுவிக்க எதிர்பார்ப்பதாக அதன் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Read More

அங்கவீனமடைந்த முன்னாள் இராணுவ வீரர்களைக்கொண்ட “இராணுவ வீரர்களின் உரிமையை வென்றெடுக்கும் தேசிய படையணி” யானது இதுவரை தமது கோரிக்கைகளுக்கு  தீர்வுகிடைக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஆர்ப்பாட்டப் பேரணியாக ஜனாதிபதி செயலகம் வரை சென்று தமது எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக அவ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதனால் இன்று காலை முதல் காலிமுகத்திடலுக்கு பிரவேசிக்கும் லோட்டஸ் சுற்றுவட்டத்தில் இருந்து, ஜனாதிபதி செயலகம் வரை செல்லவுள்ளனர்.  அவ்வீதியடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமாகிய ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மஹிந்த சார்பு கூட்டு எதிர்க் கட்சி எம்.பிக்கள் 34 பேரின் கையொப்பத்துடன் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இன்று (08) பாராளுமன்றத்தில் நடைபெறும் கட்சித்தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் இந்த  நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டது. நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிப்பதற்காக அவசரமாக திகதியொன்றை நிர்ணயிக்க இன்றைய  கூட்டத்தில் கோர இருப்பதாக கூட்டு எதிர்க் கட்சித் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Read More

2017ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றன. பரீட்சாத்திகள் தமது அடையாள அட்டை மற்றும் பரீட்சைக்கான அனுமதிச் சீட்டுடன் காலை 08.00 மணிக்கு முன்னர் பரீட்சை மண்டபத்துக்கு சமூகமளிக்குமாறு, கோரப்பட்டுள்ளது

Read More

யாழ்ப்பாணம் பகுதியில் சிவில் பாதுகாப்பு சட்டங்கள் கடுமைப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் பேரிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த தினங்களில் யாழ் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்களை தொடர்ந்து குறித்த பிரதேசங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ்மா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சிவில் பாதுகாப்பு சம்பந்தமாக கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எந்தவொரு அவசரத் தேவையின் போதும் பொலிஸாருக்கு உதவி வழங்குவதற்கு […]

Read More
Facebook
Twitter
YouTube
Google+
http://serendibfm.lk/date/2017/08
Pinterest
INSTAGRAM