அமெரிக்காவின் கலிபோனியா மாகாணத்திலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த இத்துப்பாக்கிப் பிரயோகத்தில் மற்றுமிரு பிள்ளைகள் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாடசாலை ஆசிரியையொருவரின் கணவனினால் குறித்த ஆசிரியை இருந்த வகுப்பறைக்குள் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் போது மாணவர்கள் ஆசிரியையைச் சூழவும் இருந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக சர்வதேச செய்தி வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Read More

ரஷியாவில் சென்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று   (03) மாலை குண்டு  வெடித்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. சம்பவ இடத்தில் பொலிஸார்  மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

Read More

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் ஜயுன் ஹை கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது ஆட்சி காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 65 வயதான முன்னாள் ஜனாதிபதி நீதிமன்ற உத்தரவின் படி கைது செய்யப்பட்டு சியோலில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் தனது நண்பரான ச்சோய் சூன்னுக்கு, சாம்சங் உள்ளிட்ட பல நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் வசூலிப்பதற்கு அனுமதி வழங்கியமை தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

ஈராக் தலைநகர் பக்தாத்தில் இடம்பெற்ற மகிழுந்து குண்டுத் தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளதுடன்  மேலும் 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அங்குள்ள காவற்துறை சோதனைசாவடி ஒன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இன்னும் எந்த குழுவும் உரிமை கோரவில்லை. எனினும் அண்மைக்காலமாக அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளே தாக்குதல்களை நடத்துகின்ற நிலையில், இந்த தாக்குதலையும் அவர்களே மேற்கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Read More

ஆஸ்திரேலியாவின் கடற்கரை மாகாணமான  குயின்ஸ்லாந்தை கடும் புயல் தாக்கியுள்ளது. மணிக்கு 220 கி.மீ. வேகத்தில் வீசிய இந்த புயலுக்கு டெபி என பெயரிடப்பட்டுள்ளது. புருனே வானிலை மையம் புயல் எச்சரிக்கை விடுத்ததையடுத்து கடற்கரை பகுதியில் வசிக்கும் 30,000 பேரை, அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை சூறாவளி காரணமாக ஆஸ்திரேலிய மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு குயின்ஸ்லாந்தை தாக்கிய யாசிப் புயல் மூலம் எட்டப்பட்ட சேதத்தை […]

Read More

பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு அருகில் நேற்று தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஐந்து பேர் வரையில் பலியாகியுள்ளதுடன்  40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். தாக்குதல்தாரி காவற்துறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக அவர் பாதசாரிகள் மீது வாகனத்தை மோதச் செய்து பலரை காயப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினால் கவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவராலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்ற போதும், அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. தாக்குதல் நடத்தப்படும் போது நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரேசா மேய் உள்ளிட்டவர்கள் இருந்த […]

Read More

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட புதிய குடிவரவுத் தடை குறித்த சட்ட மூலத்துக்கு மீண்டும் தடை ஏற்பட்டுள்ளது. ஹவாய் பிராந்திய நீதிபதி இதற்கான தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஏற்கனவே அவர் 7 நாடுகளின் அகதிகளுக்கு தடைவிதித்து வெளியிட்ட குடிவரவு சட்ட மூலத்துக்கு நீதிமன்றங்களின் ஊடாக தடை ஏற்பட்டிருந்தது. இதனை அடுத்து அவர் வெளியிட்ட புதிய சட்ட மூலம் இன்று நள்ளிரவுடன் அமெரிக்காவில் அமுலாக்கப்படவிருந்தது. இந்த சட்ட மூலம் 6 முஸ்லிம் நாடுகளின் பிரஜைகளுக்கு 90 நாட்களுக்கும், […]

Read More

பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பப்புவா நியூ கினியாவின் தென் கடற்பகுதியில் 6.5 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கன்ரியன் பிரதேசத்தில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் எபிட்டின் கடற்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கு சொத்து குவிப்பு வழக்கு தொடர்பில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சம் பின்வருமாறு. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை, சிறப்பு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்தது. விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 3 பேருக்கும் தலா ரூ. 10 கோடி விதிக்கப்பட்ட அபராதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தண்டனை வழங்கப்பட்டுள்ள 3 பேரும் […]

Read More

அதிமுக பொதுச் செயலர் சசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் அவர்கள் நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோரே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

Read More
Facebook
Twitter
YouTube
Google+
http://serendibfm.lk/category/world-news/page/3
Pinterest
INSTAGRAM