இந்தியாவின 14 வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவி ஏற்றார். இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மக்களவைத் தலைவர் மீரா குமார் ஆகியோர் போட்டியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்திய ஜனாதிபதி தேர்தல் 17 ஆம் திகதி நடைபெற்று முடிவுகள் கடந்த 20 ம் திகதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் […]

Read More

ஜேர்மனியில் இந்த மாத ஆரம்பத்தில் நடைபெற்ற ஜீ20 மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை இரகசியமாக சந்தித்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு இடையிலான அதிகாரப் பூர்வ சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை இதற்கு மேலதிகமாக இரகசியமான முறையில் மற்றுமொரு சந்திப்பும் இடம்பெற்றுள்ளது. அவர்களுக்கு இடையிலான இந்த சந்திப்பில் ரஷ்யாவின் மொழிப்பெயர்ப்பாளர் ஒருவர் மாத்திரமே இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன்போது பேசிக்கொள்ளப்பட்ட விடயங்கள் குறித்த தகவல்கள் எவையும் வெளிப்படுத்தப்படவில்லை. எவ்வாறாயினும் கடந்த […]

Read More

ரஷ்யாவின் கம்சட்கா பெனிசுலா நகருக்கு அருகில் உள்ள நிக்கோல்ஸ்கோயே தீவுப்பகுதிக்கு அருகே 7.8 ரிக்டர் அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மற்றும் அமெரிக்க பசிபிக் சுனாமி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், ரஷ்யாவின் நிகோல்ஸ்கோயே தீவிலிருந்து 200 கி.மீ தொலைவில் 7.8 ரிக்டர் அளவில் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 6 மைல் (10 கிமீ) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Read More

அமெரிக்கவில் உள்ள மிசிசிப்பி மாநிலத்தில் கேசி-130 ரக கடற்படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் 12 பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 16 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தேடுதல் பணிகள் அந்த பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Read More

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட முஸ்லிம் தேசங்களின் பிரஜைகளுக்கான பயணத்தடை சட்ட மூலத்திற்கு வழங்கிய அனுமதி,  இன்று  முதல் அமுலாகிறது. அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் இதற்கான அனுமதியை அண்மையில் வழங்கியிருந்தது. ஈரான், லிபியா, சிரியா, சோமாலியா, சுடான் மற்றும் யேமான் ஆகிய நாடுகளின் அமெரிக்காவிற்கு பிரத்தயேக தொடர்பில்லாத எவருக்கும் இதன்படி அந் நாட்டுக்கு வருவதற்கான வீசா வழங்கப்படாது. இந்த தடை 90 நாட்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் அனைத்து அகதிகளுக்கும் 120 நாட்கள் அமெரிக்காவிற்குள் நுழையும் […]

Read More

லண்டன் தொடர்மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். 65 பேர் வரையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கட்டிடத்துக்குள் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படும் அதேநேரம், பலர் கட்டித்தின் யன்னல் வழியாக குதித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த பிரதமர் தெரேசா மேய் உத்தரவிட்டுள்ளார்.

Read More

பங்களாதேஷில் பெய்து வரும் பருவ மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 134 ஆக உயர்வடைந்துள்ளது. பருவமழை காரணமாக பங்களாதேஷின் பல பகுதிகளில் வௌ்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் அநேகமான பகுதிகளுக்கு தொடர்பினை ஏற்படுத்த இயலவில்லை எனவும்,அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Read More

இங்கிலாந்தின் லண்டன் நகரில் 24 மாடி கட்டிடத்தில் பாரிய தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டுத் தொகுதி அமைந்துள்ள இக்கட்டிடத்தின் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீயே முழுக் கட்டிடத்துக்கும் பரவியுள்ளதாகவும் தீயணைக்கும் நடவடிக்கையில் சுமார் 200 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

கட்டார் மக்களுக்கு ஹஜ், உம்ரா வழிபாடுகளுக்குச் செல்ல முடியாத ஒரு நிலைமை உருவாகியுள்ளது. சவுதி அரேபியா கட்டார் மக்களுக்கு மக்கா வருவதற்கான அனுமதியை தடை செய்வதாக அறிவித்துள்ளதையடுத்து இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை குறித்து கட்டார் மக்கள் அந்நாட்டிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது

Read More

பிரிட்டன் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அதிக இடங்களில் வென்று முன்னிலை வகித்து வருகின்றது. பிரிட்டன் பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் 2020-ம் ஆண்டு வரை இருந்த நிலையில். ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு நாட்டில் வலிமை வாய்ந்த, நிலையான தலைமை தேவை என்று கூறி பாராளுமன்றத்துக்கு திடீர் தேர்தலை நடத்தப் போவதாக பிரதமர் தெரசா மே அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்த தேர்தலில் […]

Read More
Facebook
Twitter
YouTube
Google+
http://serendibfm.lk/category/world-news/page/2
Pinterest
INSTAGRAM