பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்வதற்காக, நிறுவப்படவிருக்கின்ற விசேட மேல் நீதிமன்றத்துக்கான சட்டமூலத்தை, எதிர்வரும் ஜனவரி மாதத்தில், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக, அரச தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணையாமால் விலகி, பரந்த கூட்டணியாக போட்டியிட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் சுதந்திர கட்சியுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் என மஹிந்த அணி முன்னதாக அறிவித்திருந்தது. எனினும் அந்த அறிவிப்புக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிடம் இருந்து இதுவரை வரையில் எந்த பதிலும் கிடைக்கப் பெறாத நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சுதந்திர கட்சியுடன் இணையாமல், பிரத்தியேக கூட்டணியாக […]

Read More

காலி – மாத்தறைக்கு இடையிலான பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி – மாத்தறை வரை பயணித்த ரயிலில் மோதிய இவர் படுகாயமடைந்த நிலையில், கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் மரணித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்தவர் காலி – கொடுகொட பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து காலி துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

அவிஸாவளை – கொஸ்கம வீதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் பரவிய தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. தீ பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – அவிஸாவளை ஹய்லெவல் வீதியின் கொஸ்கம மற்றும் சாலாவ வரையிலான விதிகள் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 7.40 மணியளவில் குறித்த வர்த்தக நிலையத்தில் தீ பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வாகன மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள கருணா அம்மான் என அறியப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பிணை நிபந்தனை தளர்த்தப்பட்டது. கருணா அம்மானின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். ஒவ்வொரு வாரமும் காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் கருணா அம்மான் முன்னிலையாகுமாறு, அவருக்கு பிணை வழங்கும் போது நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் இந்த நிபந்தனையை தளர்த்துமாறு அவரது […]

Read More

கடவுச் சீட்டுகளில் விரல் அடையாளத்தை பதிவுசெய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு-குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 16 வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கான கடவுச் சீட்டில் விரல் அடையாளம் பதிவுசெய்யப்படவுள்ளதாக குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிடுகின்றார். ஆயினும், 16 வயதுக்கு குறைந்தவர்களுக்கான கடவுச்சீட்டில் இந்த நடைமுறை பின்பற்றப்பட மாட்டாதெனவும் அவர் கூறினார். இதன்பொருட்டு கொழும்பு பிரதான அலுவலகம் உட்பட மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய பிராந்திய அலுவலகங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று முதல் […]

Read More

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் தலைசிறந்த நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்த்தன எதிர்வரும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக நியமனம் பெற்றுள்ளார். எனினும் முழுநேர ஆலோசகராக இவர் செயற்படமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் வருடத்தின் அதிகளவான காலப்பகுதியை இதற்காக செலவிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரராக இனங்காணப்பட்டுள்ள மஹேல ஜயவர்த்தன பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராவார். குறிப்பாக ஆசிய ஆடுகளங்களில் இவரது அனுபவமானது எதிர்வரும் 18 […]

Read More

கல்கிஸ்சை கடலில் குளிப்பதற்காக சென்று காணாமற்போன இரண்டு மாணவர்களில் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். தெஹிவளை – அத்திடிய பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவர் நேற்று (23) பிற்பகல் கல்கிஸ்சை கடலில் குளிக்கச் சென்றிருந்தனர் . இவர்களில் இருவர் அலையில் அள்ளுண்டு சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடற்படையினரின் ஒத்துழைப்புடன் காணாமற்போன மாணவர்களை தேடும் நடிவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், இன்று (24) அதிகாலை மாணவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Read More

மத்திய வங்கி பிணை முறியுடன் தொடர்புடைய கோப் உபகுழு அறிக்கையை வெளியிட பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய வங்கி பிணை முறி தொடர்பில் சபாநாயகரின் பணிப்பில் கோப் உபகுழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்விசாரணையின் அறிக்கையை சபாநாயகருக்கு கையளிக்கும் முன்னர் பகிரங்கப்படுத்துவது சட்டவிரோத செயல் என்றும் அதற்கு தடை விதிக்குமாறும் கோரி பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க மனு தாக்கல் செய்திருந்தார். அந்த […]

Read More

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக பதவியேற்கச் செய்வதற்கு தலைமையேற்று செயற்பட்ட பிரதான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் கொண்ட குழுவொன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வாட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. சுகாதார அமைச்சர் டாக்டர். ராஜித சேனாரட்ன மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கிராமிய அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூனா ரணதுங்க காணி அமைச்சர் எம்.கே.டி. எஸ்.குணவர்தன அமைச்சர் பியசேன கமகே உயர்கல்வி […]

Read More
Facebook
Twitter
YouTube
Google+
http://serendibfm.lk/category/uncategorized
Pinterest
INSTAGRAM