ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணி சார்பில் ஒரு ஆண்டில் அதிக ஓட்டங்களைக் குவித்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை இன்றைய போட்டியின் போது டில்சான் படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2001 ஆம் ஆண்டில் சனத் ஜயசூரியவினால் அந்த வருடத்தில் பெறப்பட்ட 1202 எனும் ஓட்டங்களே தொடக்க வீரரால் பெறப்பட்ட அதிக ஓட்டங்களாக காணப்பட்டது. எனினும் இன்றைய போட்டியில் 91 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்த டில்சான் வெறுமனே 24 போட்டிகளில் பங்குபற்றி இந்த சாதனையை புதுப்பித்துள்ளார்.

Read More

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இறுதிநாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இன்றைய ஆட்டத்தின் போது தென்னாபிரிக்க அணி 6 விக்கட்டுகள் கைவசம் உள்ள நிலையில் 280 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் உள்ளது. தமது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி நேற்றைய ஆட்டநிறைவு வரை 4 விக்கட் இழப்பிற்கு 136 ஓட்டங்களை பெற்றிருந்தது. முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்க அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 214 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அணி முதல் […]

Read More

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 27.4 ஓவர்கள் நிறைவில் 117 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பாக குலசேகர 19 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். நியூஸிலாந்து சார்பாக பந்துவீச்சில் எம்.ஜே.ஹென்றி 33 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 8.2 ஓவர்கள் நிறைவில் 118 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அணி […]

Read More

குசல் ஜனித் பெரேராவிற்கு நான்கு ஆண்டுகள் கிரிக்கட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எனினும் இதனை எதிர்த்து மேன்முறையீடு செய்யப் போவதாக அவர் கூறியுள்ளார். தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தியதாக குசல் ஜனித் பெரேரா மீது குற்றம் சுமத்தப்பட்டு நியூஸிலாந்து தொடரில் இருந்து அவர் மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரின் சிறுநீரை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தி பீ மாதிரி சோதனையின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் […]

Read More

2015 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி இன் விருது மற்றும் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருது ஆகியவற்றை அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் பெற்றுக்கொண்டுள்ளார். 2015 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி இன் கிரிக்கெட் விருதுகளுக்கான விபரம் சற்று முன்னர் வெளியிடப்பட்டது. தென்னாபிரிக்க அணியின் டி வில்லியர்ஸ் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் வீரராக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் சிறந்த டி20 ஆட்டத்திற்கான விருது டு பிளசிஸிற்கு வழங்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் 56 பந்துகளில் […]

Read More

சிம்பாவே அணியுடனான டெஸ்ட் கிரிக்கட் தொடரை பங்களாதேஷ் கிரிக்கட் சபை ரத்து செய்துள்ளது. அடுத்த வருடம் இடம் பெறவுள்ள ஆசிய கிண்ணம் மற்றும் உலக இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டிகளை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பங்களாதேஷ் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதத்தில் சிம்பாவே அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக பங்களாதேஷ் செல்லவிருந்தது. டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் பல வீரர்கள் இருபதுக்கு இருபதுக்கு போட்டியில் பங்கேற்பதில்லை. இந்தநிலையில் சிம்பாவே […]

Read More

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 237 ஓட்டங்களையும், இலங்கை அணி 292 ஓட்டங்களையும் பெற்றிருந்தன. இரண்டாம் இன்னிங்ஸில் இலங்கை அணி 133 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதன்படி இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு நியுசிலாந்து அணி 189 ஓட்டங்களைப் பெறவேண்டியிருந்த நிலையில் 5 விக்கட்டுக்கள் மீதமுள்ள நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது. இரு […]

Read More

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் தொடரில் களமிறங்கவுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரரும், விக்கெட் கீப்பருமான சங்கக்காரா, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது கவுண்டி போட்டியிலும், பல்வேறு டி20 போட்டிகளிலும் ஆடி வருகிறார். சமீபத்தில் முடிந்த வங்கதேச லீக் போட்டியில் ஆடிய சங்கக்காரா அதிரடி காட்டி அசத்தினார். இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் […]

Read More

நியுசிலாந்து மற்றும் சுற்றுலா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி 122 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இறுதிநாள் ஆட்ட முடிவின் போது இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி சகல விக்கட்டுகளையும் இழந்து 282 ஓட்டங்களை பெற்றது. முன்னதாக நியுசிலாந்து அணி தமது முதல் இன்னிங்சில் 431 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கட்டை இழந்து 267 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் போட்டியை இடைநிறுத்திக்கொண்டது. இந்தநிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் சகல […]

Read More

முன்னாள் இலங்கை டெஸ்ட் அணி தலைவர் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இலங்கை கிரிக்கெட் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று (04) வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பிரதி தலைவர் பதவிக்காகவே அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இந்த தேர்தலில் போட்டியிடுகின்றார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் ஜனவரி 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதனடிப்படையில் இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையவுள்ளது. அமைச்சர் அர்ஜூன ரணதுங்க வேட்புமனு தாக்கல் செய்த சந்தரப்பத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான […]

Read More
Facebook
Twitter
YouTube
Google+
http://serendibfm.lk/category/sports-news/page/3
Pinterest
INSTAGRAM