தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்திய குற்றச்சாட்டில் தடை விதிக்ககப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் குசல் ஜனித் ​பெரேராவிற்கு மீண்டும் போட்டிகளில் விளையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. குசல் ஜனித் பெரேரா மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் அறிக்கை ஒன்றினூடாக குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய குசல் ஜனித் பெரேரா பயிற்சிகளில் ஈடுபடவும், சர்வசே போட்டிகளில் பங்கேற்கவும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Read More

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. இலங்கை நிர்ணயித்த 123 ஓட்டங்கள் எனும் வெற்றியிலக்கை மேற்கிந்தியத் தீவுகள் அணி 18.2 ஓவர்களில் மிக இலகுவாகக் கடந்தது. பெங்களூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவுசெய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சகலரும் குறைந்த […]

Read More

உலக இருபது 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று  நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கட் இழப்புக்கு 153 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணித்தலைவர் அஸ்கர் ஸ்டெனிக்ஸாய் 47 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் திசர பெரேரா 33 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார். […]

Read More

நேற்றைய தினம் இடம்பெற்ற பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசியக்கிண்ண டி20 போட்டியில் புதிய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சின் போதே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. தமக்கு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எந்தவிதமான உதிரி ஓட்டங்களையும் பங்களாதேஷ் அணியினர் வழங்கவில்லை என்பதே அந்த சாதனையாகும். இதன் காரணமாக பங்களாதேஷ் அணியினரால் மேலதிக பந்துகள் எவையும் வீசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் பந்துவீச்சின் போது உதிரிகள் எவற்றையும் வழங்காது தமது […]

Read More

ஆசிய கிண்ண 20 க்கு 20 கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணியை, சவாலுக்கு மத்தியில் பாகிஸ்தான் அணி ஏழு விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டது. மீர்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ஓட்டங்களைப் பெற்றது. சைய்மன் அன்வர் 46 ஓட்டங்களைப் பெற்றதுடன், அணித் தலைவர் அம்ஜாட் யாவீட் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களைக் குவித்தார். மொஹமட் அமீர் மற்றும் மொஹமட் இர்பான் […]

Read More

12 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று இந்தியாவின் குவாஹாட்டியில் இந்திரா காந்தி மைதானத்தில் ஆரம்பமானது. தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 8 நாடுகளை சேர்ந்த 2500 வீரர், வீராங்கனைகள் இம்முறை இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் அதேவேளை இந்தியாவில் இருந்து அதிக போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் இலங்கை சார்பாக தினூஷா ஹன்சனி என்ற வீராங்கனை மகளிருக்கான 48 கிலோகிராம் எடையுடைய பளுதூக்கும் போட்டியில் முதலாவது வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். […]

Read More

12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா அஸாம் மாநிலத்தின் குவாட்டியில் இன்று (05) ஆரம்பமாகவுள்ளது. இதில் பங்கேற்கும் இலங்கை குழாத்தின் ஒரு பிரிவினர் இன்று இந்தியாவிற்கு செல்லவுள்ளனர். 1984 ஆம் ஆண்டு ஆரம்பமான தெற்காசிய விளையாட்டு விழா, இறுதியாக 2010 ஆம் ஆண்டு பங்களாதேஷ் டாக்காவில் நடைபெற்றது. இம்முறை நடைபெறும் விழாவில் இலங்கையை பிரதிநிதித்துவபடுத்தி 467 வீர வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

Read More

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் ஜனித் பெரேரா மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோரை ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட வைக்க முயற்சித்தாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்காக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவிற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் இன்று வருகை தந்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்கு பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினரால் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸிற்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தம்மால் […]

Read More

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான பயிற்றுவிப்பாளராக முன்னாள் இலங்கை அணித் தலைவர் மார்வன் அத்தப்பத்து நியமிக்கப்பட்டுள்ளார். சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட  பயிற்றுவிப்பாளராக  நியமிக்கப்பட்டமை தொடர்பில் சிம்பாப்வே கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மாவர்ன் அதபத்து 2014 இலிருந்து 2015 வரை இலங்கை அணியில் துடுப்பாட்ட ஆலோசகராக செயற்பட்டார். இதேவேளை, தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மக்கயா நிற்னி சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இன்றைய தினம் இடம்பெற்ற நியூசிலாந்து அணியுடனான போட்டியில் 8 விக்கெட்டுக்களினால் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. 277 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 46.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் தமக்கிடையே 98 ஓட்டங்களை பகிர்ந்ததுடன், 2 அவது விக்கெட்டுக்காக டில்சான் மற்றும் திரிமன்னே ஜோடி 111 ஓட்டங்களைக் குவித்தது. அத்துடன் மூன்றாவது விக்கெட்டுக்காக பிரிக்கப்படாத 68 […]

Read More
Facebook
Twitter
YouTube
Google+
http://serendibfm.lk/category/sports-news/page/2
Pinterest
INSTAGRAM