சர்வதேச கிரிக்கட் பேரவையினால் கிரிக்கட் விளையாட்டு வீரர்களுக்காக வழங்கப்படும் அதிகூடிய உயர்விருதான HALL OF FAME விருது இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர முத்தையா முரளிதரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்பியன் வெற்றிக்கிண்ண கிரிக்கட் போட்டித்தொடரில் நேற்று நடைபெற்ற இந்திய இலங்கை கிரிக்கட் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முரளிதரனுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் HALL OF FAME விருதினை பெற்ற முதலாவது இலங்கை வீரர் என்பதனை முத்தையா முரளிதரன் வரலாற்றில் பதிவு […]

Read More

செம்பியன் கிண்ண கிரிக்கட் போட்டியின் 9வது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் குழு ஏ அணிகளான நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டி கார்டிப்  விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

Read More

ஜ.சி.சி செம்பியன் கிண்ண தொடருக்கான இலங்கை அணித் தலைவராக அஞ்சலோ மெதிவ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அணியின் உபதலைவராக உபுல் தரங்கவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 40 ஓட்டங்களால் ​வெற்று பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய களமிறங்கிய அந்த அணி சார்பில் சிறப்பாக ஆடிய டு பிளிஸ்சிஸ் 185 ஓட்டங்களை விளாசினார். மேலும் ஏ.பி.டி வில்லியஸ் 64 ஓட்டங்களையும் டி குக் 55 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்த தென்னாபிரிக்கா 367 ஓட்டங்களை குவித்தது. […]

Read More

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பாடிய இலங்கைய அணி 39.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 163 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்தாடிய தென்னாபிரிக்கா அணி 32 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது. இந்த வெற்றி மூலம் 5 […]

Read More

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுகிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Read More

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமாக இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது. நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 5 விக்கட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடர் வெற்றியின்மூலம் இலங்கை […]

Read More

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டி சென்சுரியனில் இன்று இடம்பெறவுள்ளது. இதற்கு முன்னர் இரு அணிகளும் மோதிக் கொண்ட 6 இருபதுக்கு இருபது போட்டிகளில் 4 போட்டிகளில் தென்னாபிரிக்க அணியும் , 2 போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

2016-ம் ஆண்டு சிறந்த வீரருக்கான பிபா விருதுக்கு, போர்ச்சுக்கல் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். பார்சிலோனா அணியின் மெஸ்ஸி மற்றும் ஜெர்மனியின் அந்தோனியா கிரிஸ்மேன் ஆகியோரை பின்னுக்கு தள்ளி 31 வயதான ரோனால்டோ முதலிடத்தை பிடித்துள்ளார். முன்னதாக இந்த ஆண்டிற்கான பல்லோ டி’ஓர் விருது கடந்த டிசம்பரில் அவருக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. சாம்பியன்ஸ் லீக் மற்றும் ரியல், யூரோ கோப்பைகளை வென்று கொடுத்ததை அடுத்து அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை சேர்ந்த கார்லி […]

Read More

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன ஐசிசியின் கிரிக்கட் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் மே 31ம் திகதி மற்றும் ஜூன் 01ம் திகதி நடைபெறவுள்ள முதலாவது கூட்டத்தில் மஹேல ஜயவர்தன கலந்து கொள்ளவுள்ளார். மஹேல ஜயவர்தன 1996ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை 1161 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன் இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் ட்ராவிட்டும் இந்தக் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

Read More
Facebook
Twitter
YouTube
Google+
http://serendibfm.lk/category/sports-news
Pinterest
INSTAGRAM