விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சினுல் பலவந்தமான முறையில் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த மாணவர்கள், கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களின் போது, அரச அலுவலகங்களுக்குள் பிரவேசித்தல் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தல் என்பவற்றுக்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூடல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆரம்பித்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி இன்று கொழும்பை வந்தடையவுள்ளது. கடவத்தையில் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள இந்த ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளது. கண்டியில் இருந்து கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட […]

Read More

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் கண்டியில் இருந்து முன்னெடுத்துள்ள 5 நாள் தொடர் பாரிய ஆர்ப்பாட்டப்பேரணி இன்று கொழும்பை வந்தடையவுள்ளது. கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி முன்னெடுக்கும் குறித்த பேரணி இன்று கொழும்பை வந்தடைந்து பாரிய ஆர்ப்பாட்டமாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Read More

கொழும்பு – கண்டி வீதியின் களனி பாலத்திற்கு அருகில் போக்குவரத்து செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். களனி பாலத்தின் மீது பொருத்தப்பட்டிருந்த வீதி சமிக்ஞை பலகையொன்று இன்று காலை வாகனமொன்றின் மீது சரிந்து வீழ்ந்த நிலையில் , இன்று காலை தொடக்கம் குறித்த வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், சரிந்து வீழ்ந்த சமிக்ஞை பலகை தற்போதைய நிலையில் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ள நிலையில் , குறித்த வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

Read More

காலி வீதியில் பேருந்துகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தனி ஒழுங்கில் மாத்திரம் பேருந்துகள் பயணிப்பது எதிர்வரும் 15ஆம் திகதி முதல், கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த விசேட செயற்றிட்டத்தின் முதலாவது கட்டம் மொரட்டுவையிலிருந்து கட்டுபெத்த வரையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இரண்டாவது கட்டம், வெள்ளவத்தையிலிருந்து கொள்ளுப்பிட்டி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனை, மாநாகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளரொருவர் கூறியுள்ளார்.

Read More

மேல்மாகாணத்தில் சட்டவிரோதமான முறையில் குப்பை கொட்டிய 266 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 29 மற்றும் 30ம் திகதிகளில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக குறித்த போலிஸ் நிலையங்களினூடாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவுள்ளதாக போலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இதேபோன்ற சுற்றிவளைப்புகள் எதிர்காலத்திலும் முன்னெடுக்கப்படும் என குறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

Read More

ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலினுள் மேற்கொள்ளப்படும் முறையற்ற வர்த்தகங்களை நிறுத்த விஷேட வேலை திட்டங்களை மேற்கொள்ள, ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது, இதுபோன்ற வர்த்தகர்களை கைதுசெய்ய நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக, ரயில்வே பாதுகாப்பு பிரிவின் பிரதானி அனுர பிரேமரத்ன குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ரயில்களில் யாசகம் கேட்பவர்களையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.    

Read More

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுள்ள பேரணி காரணமாக, கொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேசிய ரீதியாக குறித்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இறக்குமதி செய்யப்படும் அரிசி ஒரு கிலோகிராமுக்கான விசேட வரி 5 ரூபாவிலிருந்து 25 சதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. நிதி அமைச்சின் வாழ்க்கை செலவு தொடர்பான குழு நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது இந்த தீர்மானத்தை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கோதுமை விதைக்கான இறக்குமதி வரி 9 ரூபாவில் இருந்து 6 ரூபாவாவும், கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி 25 ரூபாவில் இருந்து 15 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

Read More

ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக விஜித தேரர் நேற்று மாலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால், அதன் பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் கலகம் விளைவிக்கும் வகையில் செயற்படுதல் போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கடந்த அரசாங்க காலத்தில் பொதுபல சேனா அமைப்பினால், கடுமையாக நிந்திக்கப்பட்டு, தாக்கப்பட்ட வட்டரக்க தேரரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More
Facebook
Twitter
YouTube
Google+
http://serendibfm.lk/category/local-news/page/3
Pinterest
INSTAGRAM