முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோரை, எதிர்வரும் ஜூன் மாதம் 05ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக  நீதவான் நீதிமன்றம் இன்று22) உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் சம்பந்தமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு இன்று நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட போது, சம்பவம் குறித்து தொடர் விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக […]

Read More

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதனுக்கு, பிரதி சபாநாயகர் பதவியினை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன சிபாரிசு செய்துள்ளதாக அமைச்சர் மனோ கணேஷன் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர், அங்கஜனை பிரதி சபாநாயகர் பதிவிக்கு ஜனாதிபதி சிபாரிசு செய்துள்ளமை தொடர்பான தகவலை, இன்று(22) கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியா தெரிவித்துள்ளதாகவும் ​அமைச்சர் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நாளை(16) ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர். குறித்த சந்திப்பில் 8 மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் லீதாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார்.

Read More

நிர்வாக முறைக்கேடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நுகேகொடை – அனுலா வித்தியாலயத்தின் அதிபர் இடமாற்றப்பட்டுள்ளார். அதன்படி, நுகேகொடை அனுலா வித்தியாலயத்தின் அதிபர், கல்வி அமைச்சுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Read More

முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்கவை வெலிசெர கடற்படை வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு கொழும்பு – கோட்டை நீதவான் இன்று(15) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read More

பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்வதற்காக, நிறுவப்படவிருக்கின்ற விசேட மேல் நீதிமன்றத்துக்கான சட்டமூலத்தை, எதிர்வரும் ஜனவரி மாதத்தில், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக, அரச தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More

இலங்கையின் எந்தப் பாகங்களிலும் இயற்கை அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை என காலநிலை அவதான நிலையம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் எந்தப் பகுதியிலும் இயற்கை அனர்த்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என குறித்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, மக்கள் தேவையற்ற பீதிகளை அடுத்து அச்சமடையத் தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Read More

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச பணியாளர்களின் சம்பளம் 15% ஆல் அதிகரிக்கப்படும் என உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தன நாடாளுமன்றில் வைத்து நேற்று(14) தெரிவித்துள்ளார். அலுவலக உதவியாளரில் இருந்து சட்டமா அதிபர் வரையில் அனைத்து அரச பணியாளர்களுக்கும் குறித்த இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது. அதன்படி, அலுவலக உதவியாளரின் அடிப்படை சம்பளம் 14,000 ரூபாயில் இருந்து 23,000 ரூபா, சட்டமா அதிபரது சம்பளம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபா மற்றும்  விசேட மருத்துவர்களின் அடிப்படை […]

Read More

இலங்கையின் மனித உரிமை தொடர்பான மீளாய்வுக் கூட்டம் இன்று(15) ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அனைத்துலக காலாந்தர மீளாய்வு செயற்குழுவில் இன்று(15) ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது. இந்த மீளாய்வை தேசிய கொள்கைள் மற்றும் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழுவினர் மேற்கொள்ளவுள்ளனர். இக் குழுவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு , சட்டமா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி செயலகம், ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை […]

Read More

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விடயத்தில் ​அமைச்சுகள் இரண்டின் அதிகாரிகள் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டுள்ளனரென, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்கு எதிராகவே, மாலபே மருத்துவக் கல்லூரியின் பெற்றோர் சங்கம், ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்றைச் செய்து, கடிதமொன்றையும் கையளித்துள்ளது. இவர்கள் மேற்கொண்ட ஊழல் காரணமாக 80,௦௦௦ பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர் எனவும், 800 பேர் கல்வி வரப்பிரசாதங்கள் கிடைக்கப் பெறாதும் உள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் கெமுனு […]

Read More
Facebook
Twitter
YouTube
Google+
http://serendibfm.lk/category/local-news/page/2
Pinterest
INSTAGRAM