திருத்த வேலை காரணமாக, கண்டியின் சில பகுதிகளில் நாளை ஆறு மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி நாளை காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. ஹாரிஸ்பத்து மற்றும் அகுரண பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கஹல்ல, கஹவத்தை, அகுரண, குருகோட, தேலம்புகஹவத்தை, ஹாரிஸ்பத்துவ, கோஹாகோட, நுகேவேல, பரிகம, ரஜபிஹில்ல, மெதவெல மற்றும் பிரஜாபிடிய ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும். […]

Read More

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் கைது செய்யமாட்டோம் என சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.   ராடா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். டிரான் அலஸ், நிதி மோசடி தொடர்பில் தம்மைக் கைதுசெய்வதைத் தவிர்க்குமாறு உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை முற்பகல் 10.30 மணிக்கு வீரகெட்டிய மெதமுலன இல்லத்திலிருந்து விசேட உரையொன்றினை ஆற்றவுள்ளார். இதேவேளை, மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நியமிப்பது குறித்து நாளை மெதமுலனவிற்கு சென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தீர்மானிக்க உள்ளனர். இதன்படி, மாத்தறை தெவிநுவர உபுல்வன் தேவாலயத்திற்கு அருகாமையிலிருந்து லட்சக் கணக்கான மக்களின் பங்களிப்புடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகனத் தொடரணியாக மஹிந்தவை பார்க்கச் செல்லவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். “அமைதியாக […]

Read More

உயர்தரப் பரீட்சை நடைபெறும் பாடசாலைகளில் வாக்குகள் எண்ணப்படாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இம்முறை உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் எந்தவொரு பாடசாலையிலும், பொதுத் தேர்தல் வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்படாது. வாக்கு எண்ணும் நிலையமொன்றை அமைப்பதற்கு குறைந்த பட்சம் ஐந்து நாட்கள் தேவைப்படும். அவ்வாறு ஐந்து நாட்கள் செலவிட்டு வாக்கு எண்ணும் நிலையம் அமைத்தால், பரீட்சைகளை பாதிக்கப்படலாம். கண்டி, கொழும்பு, பதுளை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்கு எண்ணும் நிலையங்களில் […]

Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் தமக்குள் வேட்பாளர்களைப் பகிர்ந்து கொள்வதில் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று அல்லது நாளை நடைபெறவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கூட்டத்தில் இழுபறியில் உள்ள யாழ், வன்னி, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களின் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் அங்குள்ள மலையக மக்களைச் […]

Read More

முகத்தை முழுமையாக மூடும் தலைகவசத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ஜூலை மாதம் 14ஆம் திகதிவரை மேல் நீதிமன்றம் நீடித்துள்ளது. முகத்தை முழுமையாக மூடும் தலைகவசம் அணிவதற்கு தடை விதித்து பொலிஸார் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு எதிரான நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இத்தடையுத்தரவை நீடித்து நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை(30) உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நாடாளுமன்ற தேர்தல் கண்காணிப்பு பணிகளில், பெவ்ரல் மற்றும் ஃகபே ஆகிய அமைப்புகளின் ஊடாக சுமார் 25,050 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 15,050 கண்காணிப்பாளர்கள் பெவ்ரல் அமைப்பின் ஊடாக ஆயத்தமாக்கப்பட்டுள்ளதுடன் அதில் 50 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். இதேவேளை, தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக சுமார் 10,000 பேர் ஃகபே அமைப்பின் ஊடாக கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தேவையேற்படின் இந்த கண்காணிப்பு பணிகளில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த தயாராக உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த […]

Read More

அமைச்சர் தலதா அத்துகோரளவின் முதன்மை ஆதரவாளரான துஷார தேவாலேகம என்பவர் இனந்தெரியாத சிலரினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, நொரகல்லேவத்த பிரதேசத்தில் இக்கொலை சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தலதா அத்துகோரளவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த நபரே இவ்வாறு இனந்தெரியாதோரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான, 37 வயது நிரம்பிய துஷார தேவாலேகம என்பரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக இரத்தினபுரி […]

Read More
Facebook
Twitter
YouTube
Google+
http://serendibfm.lk/category/local-news/page/171
Pinterest
INSTAGRAM