காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நாளை(16) ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர். குறித்த சந்திப்பில் 8 மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் லீதாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார்.

Read More

நிர்வாக முறைக்கேடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நுகேகொடை – அனுலா வித்தியாலயத்தின் அதிபர் இடமாற்றப்பட்டுள்ளார். அதன்படி, நுகேகொடை அனுலா வித்தியாலயத்தின் அதிபர், கல்வி அமைச்சுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Read More

முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்கவை வெலிசெர கடற்படை வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு கொழும்பு – கோட்டை நீதவான் இன்று(15) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read More

பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்வதற்காக, நிறுவப்படவிருக்கின்ற விசேட மேல் நீதிமன்றத்துக்கான சட்டமூலத்தை, எதிர்வரும் ஜனவரி மாதத்தில், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக, அரச தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More

இலங்கையின் எந்தப் பாகங்களிலும் இயற்கை அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை என காலநிலை அவதான நிலையம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் எந்தப் பகுதியிலும் இயற்கை அனர்த்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என குறித்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, மக்கள் தேவையற்ற பீதிகளை அடுத்து அச்சமடையத் தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Read More

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச பணியாளர்களின் சம்பளம் 15% ஆல் அதிகரிக்கப்படும் என உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தன நாடாளுமன்றில் வைத்து நேற்று(14) தெரிவித்துள்ளார். அலுவலக உதவியாளரில் இருந்து சட்டமா அதிபர் வரையில் அனைத்து அரச பணியாளர்களுக்கும் குறித்த இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது. அதன்படி, அலுவலக உதவியாளரின் அடிப்படை சம்பளம் 14,000 ரூபாயில் இருந்து 23,000 ரூபா, சட்டமா அதிபரது சம்பளம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபா மற்றும்  விசேட மருத்துவர்களின் அடிப்படை […]

Read More

இலங்கையின் மனித உரிமை தொடர்பான மீளாய்வுக் கூட்டம் இன்று(15) ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அனைத்துலக காலாந்தர மீளாய்வு செயற்குழுவில் இன்று(15) ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது. இந்த மீளாய்வை தேசிய கொள்கைள் மற்றும் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழுவினர் மேற்கொள்ளவுள்ளனர். இக் குழுவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு , சட்டமா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி செயலகம், ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை […]

Read More

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விடயத்தில் ​அமைச்சுகள் இரண்டின் அதிகாரிகள் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டுள்ளனரென, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்கு எதிராகவே, மாலபே மருத்துவக் கல்லூரியின் பெற்றோர் சங்கம், ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்றைச் செய்து, கடிதமொன்றையும் கையளித்துள்ளது. இவர்கள் மேற்கொண்ட ஊழல் காரணமாக 80,௦௦௦ பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர் எனவும், 800 பேர் கல்வி வரப்பிரசாதங்கள் கிடைக்கப் பெறாதும் உள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் கெமுனு […]

Read More

பாடசாலை மாணவர்களுக்கு எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பம் கட்டாய பாடமாக மாற்றப்படும் என்று அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அண்மையில் குளியாப்பிட்டிய மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டார். கிராம மட்டத்தில் தகவல்தொழில்நுட்ப பாட அறிவை மேம்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். எதிர்காலத்தில் அனைத்துப் பாட விதானங்களுக்கும் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பாடமாக அமையவுள்ளது எனவும் நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கு முறையான தகவல் தொழில்நுட்ப அறிவை […]

Read More

அண்மையில் ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின்(CID) விசாரணைக்கு, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெற்றோல் நெருக்கடி தொடர்பில் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட, அமைச்சரவைச் செயற்குழுவின் விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே, இவ்விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தாலும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தினாலும், பெற்றோலுக்காக முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்கள் இரண்டுமே, ஒரே நேரத்தில் எவ்வாறு தாமதமாகின என, சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எரிபொருளுக்கான கொள்முதல் கட்டளையை வழங்கிய பின்னர், நாட்டுக்கு அக்கப்பல் […]

Read More
Facebook
Twitter
YouTube
Google+
http://serendibfm.lk/category/local-news
Pinterest
INSTAGRAM