காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நாளை(16) ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர். குறித்த சந்திப்பில் 8 மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் லீதாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார்.

Read More

நிர்வாக முறைக்கேடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நுகேகொடை – அனுலா வித்தியாலயத்தின் அதிபர் இடமாற்றப்பட்டுள்ளார். அதன்படி, நுகேகொடை அனுலா வித்தியாலயத்தின் அதிபர், கல்வி அமைச்சுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Read More

முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்கவை வெலிசெர கடற்படை வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு கொழும்பு – கோட்டை நீதவான் இன்று(15) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read More

பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்வதற்காக, நிறுவப்படவிருக்கின்ற விசேட மேல் நீதிமன்றத்துக்கான சட்டமூலத்தை, எதிர்வரும் ஜனவரி மாதத்தில், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக, அரச தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More

இலங்கையின் எந்தப் பாகங்களிலும் இயற்கை அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை என காலநிலை அவதான நிலையம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் எந்தப் பகுதியிலும் இயற்கை அனர்த்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என குறித்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, மக்கள் தேவையற்ற பீதிகளை அடுத்து அச்சமடையத் தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Read More

அங்கவீனமுற்ற இராணுவத்தினர் சம்பந்தமாக அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லையானால் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிப்பதாக இராணுவத்தினரின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் யூ.டீ.வசந்த கூறியுள்ளார். நேற்றைய தினம் கொழும்பு கோட்டை பகுதியில் அங்கவீனமுற்ற இராணுவத்தினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். தற்போதும் அங்கவீனமுற்ற இராணுவத்தினர்கள் சில கொழும்பு கோட்டையில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவிகள்  முகத்தை மூடும் விதமாக ஆடையணிந்து பரீட்சைக்கு தோற்ற முடியாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சில பரீட்சாத்திகள் குறித்த முகமூடிகளை அணிந்து அதனுள் மைக்ரோ தொலைபேசிகள் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பக் கருவிகளை மறைத்து வைத்திருப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இராஜாங்க கல்வியமைச்சர் ராதா கிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், முகமூடிய நிலையில் பரீட்சை எழுதும் பரீட்சாத்திகளது உண்மை நிலையை கண்டறிவதில் ஏற்படுகின்ற சிக்கல்களை கருத்திற் கொண்டே […]

Read More

இனங்களின் தனித்துவத்தை பாதுகாத்துக் கொண்டு இலங்கையர்கள் என்று ஒன்றுபட்டு வாழ வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற முன்னாள் சபாநாயகர் அல்ஹாச் பாக்கீர் மாக்காரின் 20ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்ட போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையர் அனைவரும் ஓரின மக்கள் என்றே தேசிய கீதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் தத்தமது இன அடையாளங்களுடன் ஒன்றுமையாக வாழ வேண்டும். இலங்கையை சிங்கள நாடென்றோ, வடக்கு […]

Read More

சீனாவின் மேற்குப் பகுதியில் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் 100 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கலாம் என்றும் சீன அரசாங்க செய்திகள் தெரிவித்துள்ளன. இதுவரை 8 பேருடைய சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 88 பேர் காயமடைந்துள்ளதாகவும், இவர்களில் 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் சிச்சுவான் மாகாண உத்தியோகபுர்வ செய்திச் சேவை அறிவித்துள்ளது. உயிரிழந்த 8 பேரில் ஐவர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எனவும் அச்செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. சுமார் 6.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ள […]

Read More

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை இம்மாற்றம் நடைமுறையில் இருக்கும் எனவும் தற்பொழுது சேவையிலுள்ள ரயில்களை விட மேலதிக ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை விடுமுறையை முன்னிட்டு இன்று (09) முதல் ரயில் சேவையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More
Facebook
Twitter
YouTube
Google+
http://serendibfm.lk/category/headline-news
Pinterest
INSTAGRAM