காலி வீதியில் பேருந்துகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தனி ஒழுங்கில் மாத்திரம் பேருந்துகள் பயணிப்பது எதிர்வரும் 15ஆம் திகதி முதல், கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த விசேட செயற்றிட்டத்தின் முதலாவது கட்டம் மொரட்டுவையிலிருந்து கட்டுபெத்த வரையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இரண்டாவது கட்டம், வெள்ளவத்தையிலிருந்து கொள்ளுப்பிட்டி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனை, மாநாகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளரொருவர் கூறியுள்ளார்.

Read More

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுள்ள பேரணி காரணமாக, கொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேசிய ரீதியாக குறித்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

தமது கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கணிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று காலை ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவனத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக அதன் இணை ஏற்பாட்டாளர் ராஜகருண எமது செய்தி சேவை வினவிய போது குறிப்பிட்டுள்ளார்.

Read More

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பிக்குகள் முன்னணியின் செயலாளர் ஆனந்த சாகர ஹிமி இற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இரத்தமலானை சதொச களஞ்சியசாலைக்கு ஒருகொடவத்தையில் இருந்து கொண்டுவரப்பட்ட கொள்கலனில் கொக்கேயின் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்துடன் சதொசவையும் தன்னையும் சம்பந்தப்படுத்தி சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்த போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் […]

Read More

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட புதிய மருத்துவ அதிகாரிகள் சங்கமும், மாலபே தனியார் மருத்துவக் கல்லுரிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் ருச்சிர சரணபால இதனைத் தெரிவித்துள்ளார். இந்த புதிய சங்கத்தின் பொதுக்கூட்டம், கொழும்பு அறக்கட்டளை நிறுவனத்தில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் இன்று மாலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

தாய்லாந்து 1லட்சம் மெற்றிக்தொன் நாட்டரிசியை இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இது தொடர்பான புரிந்துணர்வுக் கடிதமும், கொள்வனவு சம்பந்தமான ஆவணங்களும் ஒரு வாரத்திற்குள்ளே தாய்லாந்து அரசுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,; கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 1மெற்றிக்தொன் நாட்டரிசியை 425டொலருக்கு வழங்குவதற்கு தாய்லாந்து அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. தாய்லாந்திலிருந்து அரிசி இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் இலங்கை ரூபாவில் இந்த விலை 65.31ஆகும். இலங்கைக்கு ஏற்கனவே மியன்மார் அரசு 30ஆயிரம் வெள்ளைப்பச்சை அரிசியை வழங்குவதற்கு […]

Read More

  முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமன்றி, முழு சமூகத்திற்கும் பாரிய இழப்பு ஜிப்ரி ஹனீபாவின் மறைவு குறித்து அமைச்சர் ரிஷாட் அனுதாபம் திஹாரி அங்கவீனர் நிலையத்தின் ஸ்தாபகரும் பிரபல சமூக சேவையாளருமான ஜிப்ரி ஹனீபாவின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமின்றி அனைத்து சமூகங்களுக்கும் பாரிய இழப்பாகுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சமூதாயத்தில் வலது குறைந்தோர் கவலையின்றியும், நிம்மதியுடனும் வாழும் வகையில், அவரது முயற்சியினால் திஹாரியில் உருவாக்கப்பட்ட அங்கவீன நிலையம் சமூகத்தில் […]

Read More

  இலங்கையின் சிறு, நடுத்தர தொழில் முயற்சியாண்மையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பாரிய அளவில் ஐரோப்பிய யூனியனும், சர்வதேச நாடுகளும் உதவுவதற்கு முன்வந்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கைக்கான ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினால் (யு.என்.டி.பி) ஒழுங்கு செய்யப்பட்ட தேசிய வர்த்தகச் சந்தைக் கண்காட்சி பண்டாரநாயக்க சர்வசே மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போது, பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியை அவர் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். நிகழ்வில் அமைச்சர் உரையாற்றியதாவது, இளைஞர் மற்றும் பெண்கள்  […]

Read More

கொழும்பு கோட்டையில் இருந்து தலைமன்னார் வரையிலான தொடரூந்து சேவைகள் இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய குறித்த சேவைகள் மதவாச்சி வரையில் மாத்திரமே இடம்பெறும் என தொடரூந்து கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த தொடரூந்து வீதியில் மதவாச்சி மற்றும் செட்டிக்குளத்திற்கு இடையில் மேற்கொள்ளப்படும் திருத்தப்பணிகளின் நிமிர்த்தமே இவ்வாறு தொடரூந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

Read More

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அழைப்பாணை பிறப்பித்துள்ளது. போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டுக்கு அமைய ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்திநாயக்கவிற்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முறைப்பாட்டில் முதலாம் மற்றும் இரண்டாம் சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டுள்ளவர்கள், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க் கட்சி தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொது வேட்பாளராக போட்டியிட்ட […]

Read More
Facebook
Twitter
YouTube
Google+
http://serendibfm.lk/author/serendib/page/3
Pinterest
INSTAGRAM