இலங்கையின் மனித உரிமை தொடர்பான மீளாய்வுக் கூட்டம் இன்று(15) ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அனைத்துலக காலாந்தர மீளாய்வு செயற்குழுவில் இன்று(15) ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது. இந்த மீளாய்வை தேசிய கொள்கைள் மற்றும் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழுவினர் மேற்கொள்ளவுள்ளனர். இக் குழுவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு , சட்டமா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி செயலகம், ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை […]

Read More

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விடயத்தில் ​அமைச்சுகள் இரண்டின் அதிகாரிகள் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டுள்ளனரென, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்கு எதிராகவே, மாலபே மருத்துவக் கல்லூரியின் பெற்றோர் சங்கம், ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்றைச் செய்து, கடிதமொன்றையும் கையளித்துள்ளது. இவர்கள் மேற்கொண்ட ஊழல் காரணமாக 80,௦௦௦ பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர் எனவும், 800 பேர் கல்வி வரப்பிரசாதங்கள் கிடைக்கப் பெறாதும் உள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் கெமுனு […]

Read More

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணையாமால் விலகி, பரந்த கூட்டணியாக போட்டியிட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் சுதந்திர கட்சியுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் என மஹிந்த அணி முன்னதாக அறிவித்திருந்தது. எனினும் அந்த அறிவிப்புக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிடம் இருந்து இதுவரை வரையில் எந்த பதிலும் கிடைக்கப் பெறாத நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சுதந்திர கட்சியுடன் இணையாமல், பிரத்தியேக கூட்டணியாக […]

Read More

பாடசாலை மாணவர்களுக்கு எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பம் கட்டாய பாடமாக மாற்றப்படும் என்று அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அண்மையில் குளியாப்பிட்டிய மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டார். கிராம மட்டத்தில் தகவல்தொழில்நுட்ப பாட அறிவை மேம்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். எதிர்காலத்தில் அனைத்துப் பாட விதானங்களுக்கும் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பாடமாக அமையவுள்ளது எனவும் நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கு முறையான தகவல் தொழில்நுட்ப அறிவை […]

Read More

அண்மையில் ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின்(CID) விசாரணைக்கு, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெற்றோல் நெருக்கடி தொடர்பில் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட, அமைச்சரவைச் செயற்குழுவின் விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே, இவ்விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தாலும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தினாலும், பெற்றோலுக்காக முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்கள் இரண்டுமே, ஒரே நேரத்தில் எவ்வாறு தாமதமாகின என, சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எரிபொருளுக்கான கொள்முதல் கட்டளையை வழங்கிய பின்னர், நாட்டுக்கு அக்கப்பல் […]

Read More

முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட மூவரதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று(15) கொழும்பு – கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை, எதிர்வரும் 21ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

இனங்களின் தனித்துவத்தை பாதுகாத்துக் கொண்டு இலங்கையர்கள் என்று ஒன்றுபட்டு வாழ வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற முன்னாள் சபாநாயகர் அல்ஹாச் பாக்கீர் மாக்காரின் 20ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்ட போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையர் அனைவரும் ஓரின மக்கள் என்றே தேசிய கீதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் தத்தமது இன அடையாளங்களுடன் ஒன்றுமையாக வாழ வேண்டும். இலங்கையை சிங்கள நாடென்றோ, வடக்கு […]

Read More

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. இன்று இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்தக் கோரிக்கையை விடுவிக்க எதிர்பார்ப்பதாக அதன் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Read More

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சினுல் பலவந்தமான முறையில் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த மாணவர்கள், கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களின் போது, அரச அலுவலகங்களுக்குள் பிரவேசித்தல் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தல் என்பவற்றுக்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூடல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆரம்பித்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி இன்று கொழும்பை வந்தடையவுள்ளது. கடவத்தையில் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள இந்த ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளது. கண்டியில் இருந்து கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட […]

Read More
Facebook
Twitter
YouTube
Google+
http://serendibfm.lk/author/serendib/page/2
Pinterest
INSTAGRAM