அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட முஸ்லிம் தேசங்களின் பிரஜைகளுக்கான பயணத்தடை சட்ட மூலத்திற்கு வழங்கிய அனுமதி,  இன்று  முதல் அமுலாகிறது.

அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் இதற்கான அனுமதியை அண்மையில் வழங்கியிருந்தது.

ஈரான், லிபியா, சிரியா, சோமாலியா, சுடான் மற்றும் யேமான் ஆகிய நாடுகளின் அமெரிக்காவிற்கு பிரத்தயேக தொடர்பில்லாத எவருக்கும் இதன்படி அந் நாட்டுக்கு வருவதற்கான வீசா வழங்கப்படாது. இந்த தடை 90 நாட்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனுடன் அனைத்து அகதிகளுக்கும் 120 நாட்கள் அமெரிக்காவிற்குள் நுழையும் தடைக்கும் அமெரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதுவும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Comment

Please enter your name. Please enter an valid email address. Please enter message.