சர்வதேச கிரிக்கட் பேரவையினால் கிரிக்கட் விளையாட்டு வீரர்களுக்காக வழங்கப்படும் அதிகூடிய உயர்விருதான HALL OF FAME விருது இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர முத்தையா முரளிதரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சம்பியன் வெற்றிக்கிண்ண கிரிக்கட் போட்டித்தொடரில் நேற்று நடைபெற்ற இந்திய இலங்கை கிரிக்கட் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முரளிதரனுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

இதன் மூலம் HALL OF FAME விருதினை பெற்ற முதலாவது இலங்கை வீரர் என்பதனை முத்தையா முரளிதரன் வரலாற்றில் பதிவு செய்துள்ளார்.

Leave A Comment

Please enter your name. Please enter an valid email address. Please enter message.