அதிக மழைக்காரணமாக களனி கங்கை, களுகங்கை, நில்வலா கங்கை மற்றும் கிங் கங்கை ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்வளங்கள் வடிகாலமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தாழ்வான பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் வரை நாட்டின் சில இடங்களில் 150 மில்லி மீட்டருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பருவபெயர்ச்சி காலநிலை நாட்டின் ஊடாக நிலவுவது இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் தென்மேற்கு பகுதியில் கடும் மழை மற்றும் காற்றும் வீசக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Leave A Comment

Please enter your name. Please enter an valid email address. Please enter message.