இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய இலங்கைய அணி 39.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 163 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய தென்னாபிரிக்கா அணி 32 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கட் தொடரை 2 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave A Comment

Please enter your name. Please enter an valid email address. Please enter message.