உலகிலேயே முதன் முறையாக மின்சாரத்தின் உதவியால் கப்பலை இயக்கி சீனா சாதனை படைத்துள்ளது.

கார் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே மின்சாரம் மூலம் இயக்கப்பட்டு வந்த நிலையில், சீனா சரக்கு கப்பலை மின்சாரம் மூலம் இயக்கி சாதனை படைத்துள்ளது.

குறித்த கப்பல் 70.5 மீட்டர் நீளமும், 600 டன் எடையும் உடையது. அதில் 2 ஆயிரம் டன் சரக்கு ஏற்றப்பட்டு மின்சாரம் மூலம் இயக்கப்பட்டுள்ளது. கப்பலில் பொருத்தப்பட்ட 26 டன் லித்தியம் பேட்டரிகளில் 2 மணி நேரம் மின்சாரம் ‘சார்ஜ்’ செய்யப்பட்டது.

இக்கப்பல் மணிக்கு 12.8 கி.மீ. வேகத்தில் 80 கி.மீட்டர் தூரம் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் உலகிலேயே முதன் முறையாக மின்சாரத்தின் உதவியால் கப்பலை இயக்கி சீனா சாதனை படைத்துள்ளது.

Leave A Comment

Please enter your name. Please enter an valid email address. Please enter message.