தென்கொரியாவின் தென்கிழக்கு பகுதியில் இன்று(15) காலை 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தென்கொரியா செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலநடுக்கம் தென்கிழக்கு கரையோரம் இருக்கும் போஹாங் நகரின் வடக்கில் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிலநடக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகின்ற இடத்திலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தென்கொரியாவின் தலைநகர் சியோலிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Comment

Please enter your name. Please enter an valid email address. Please enter message.