ரஷ்யாவின் கிழக்கு மாகாண பகுதியில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள காபரோவ்ஸ்க் மாகாணத்தில் இருந்து 1000 கி.மீ தொலைவில் உள்ள நெல்கன் என்ற கிராமத்தில் இந்த விபத்து  இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. காபரோவ்ஸ்க் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 19 பேர் செல்லக்கூடிய சிறிய ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து விட்ட இந்த விமானம் கீழே நொறுங்கி விழுந்துள்ளது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், விமானத்தின் கருப்புப்பெட்டி மீட்கப்பட்டு ஆய்வு செய்த பின்னர் விபத்துக்கான காரணம் தெரியவரும் என அந்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.

Leave A Comment

Please enter your name. Please enter an valid email address. Please enter message.