எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச பணியாளர்களின் சம்பளம் 15% ஆல் அதிகரிக்கப்படும் என உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தன நாடாளுமன்றில் வைத்து நேற்று(14) தெரிவித்துள்ளார்.

அலுவலக உதவியாளரில் இருந்து சட்டமா அதிபர் வரையில் அனைத்து அரச பணியாளர்களுக்கும் குறித்த இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது.

அதன்படி, அலுவலக உதவியாளரின் அடிப்படை சம்பளம் 14,000 ரூபாயில் இருந்து 23,000 ரூபா, சட்டமா அதிபரது சம்பளம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபா மற்றும்  விசேட மருத்துவர்களின் அடிப்படை சம்பளம் 60,௦௦௦ ரூபாயில் இருந்து 69,756 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும்.

இதற்கிடையில் அரச பணியாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளின் பொருட்டு அரசாங்கத்திற்கு ஆண்டு தோறும் 12 பில்லியம் ரூபாய் மேலதிகமாக தேவைப்படுவதாகவும் அமைச்சர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Leave A Comment

Please enter your name. Please enter an valid email address. Please enter message.