எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணையாமால் விலகி, பரந்த கூட்டணியாக போட்டியிட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் சுதந்திர கட்சியுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் என மஹிந்த அணி முன்னதாக அறிவித்திருந்தது.

எனினும் அந்த அறிவிப்புக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிடம் இருந்து இதுவரை வரையில் எந்த பதிலும் கிடைக்கப் பெறாத நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சுதந்திர கட்சியுடன் இணையாமல், பிரத்தியேக கூட்டணியாக போட்டியிட தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Comment

Please enter your name. Please enter an valid email address. Please enter message.