இந்தியாவின 14 வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவி ஏற்றார்.

இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மக்களவைத் தலைவர் மீரா குமார் ஆகியோர் போட்டியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய ஜனாதிபதி தேர்தல் 17 ஆம் திகதி நடைபெற்று முடிவுகள் கடந்த 20 ம் திகதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தமையினையடுத்து அவர் நேற்று தனது நாட்டு மக்களிற்கு உரையாற்றியுள்ளார்.

இந்த நிகழ்வில் துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன்சிங், தேவகவுடா [devakawda] காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இறுதியாக புதிய குடியரசுத் தலைவராக இன்று பதவியேற்கவுள்ள ராம்நாத் கோவிந்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

Leave A Comment

Please enter your name. Please enter an valid email address. Please enter message.